Home /News /chennai /

கோயம்பேடு மார்க்கெட்டில் பெட்டி பெட்டியாக பழங்கள் திருட்டு... திருடிய பழங்களை பாதி விலைக்கு விற்பணை செய்தது அம்பலம்

கோயம்பேடு மார்க்கெட்டில் பெட்டி பெட்டியாக பழங்கள் திருட்டு... திருடிய பழங்களை பாதி விலைக்கு விற்பணை செய்தது அம்பலம்

கோயம்பேடு மார்க்கெட்டில் பெட்டி பெட்டியாக பழங்கள் திருட்டு.

கோயம்பேடு மார்க்கெட்டில் பெட்டி பெட்டியாக பழங்கள் திருட்டு.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் அதிக விலை கொண்ட பழங்களை திருடி அவற்றை சாலையோர கடைகளுக்கு பாதி விலைக்கு விற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட் என்பது தமிழகத்திலேயே மிகப்பெரிய பழ மார்க்கெட் ஆகும். இங்கு சுமாராக 1200-க்கும் மேற்பட்ட மொத்த பழக் கடைகள் உள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், மாம்பழம் என பல பழங்கள் மொத்தமாக வரவழைக்கப்பட்டு பின் அங்கிருந்து தமிழகம் முழுவதும் சரக்கு அனுப்பப்படும்.

24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த பழ மார்க்கெட்டில் மர்ம நபர்கள் சிலர் மொத்த பழக்கடையில் இருந்து ஆப்பிள் பழங்களை பெட்டி பெட்டியாக திருடியதாக இருவரை கோயம்பேடு புறக்காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கோயம்பேடில் இரண்டு கடைகள் நடத்தி ஆப்பிள் உள்ளிட்ட பழவகைகளை வெளி வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து பின் தமிழக முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறார்.

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பல நேரங்களில் சரக்குகள் கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் கடந்த 12ஆம் தேதி ஆப்பிள் பழங்கள் வெளி மாநிலங்களில் இருந்து முரளியின் கடைக்கு வந்துள்ளது. சரக்குகளை கடைக்கு வெளியே இறக்கி வைத்துவிட்டு பணியாளர்கள் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் கடை உரிமையாளர் முரளி கடை திறப்பதற்காக வந்த பொழுது வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டிகளில் சில பெட்டிகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மூன்று மர்ம நபர்கள் ஆப்பிள் பழ பெட்டிகளை திருடி செல்வது தெரிய வந்தது.

Also Read : எங்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கிடுக... தமிழக அரசுக்கு ஊராட்சித் தலைவர்கள் கோரிக்கை

30 கிலோ எடை கொண்ட 5 பெட்டிகளை முரளியின் கடைகளில் இருந்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும், சில கடைகளில் ஆள் இல்லாத நேரம் பார்த்து அங்கேயும் ஆப்பிள், திராட்சைப் பழ பெட்டிகளை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து பழக்கடை உரிமையாளர்கள் கோயம்பேடு புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு (13 ம் தேதி) மீண்டும் அதே நபர்கள் ஆட்டோவில் வந்து வேறொரு கடையில் 5 ஆப்பிள் பழ பெட்டிகளை திருடி ஆட்டோவில் ஏற்றி தப்பி செல்ல முற்பட்டனர். அப்போது பழ மார்கெட்டில் வேலை செய்து  கொண்டிருந்த நபர்கள் தப்பி செல்ல முற்பட்ட நபர்களை ஆட்டோவுடன் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட நபர்களை கோயம்பேடு புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த கோவிந்தன்(19), முத்து கருப்பன் (21) என தெரிய வந்தது. போலீசாரின் தொடர்விசரணையில் இவர்கள் தொடர்ச்சியாக கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் ஆளில்லாத நேரங்களில் பழ பெட்டிகளை வெளி மாநிலங்களில் இருந்து வரும் அதிக விலை கொண்ட பழங்களை திருடி அவற்றை சாலையோர கடைகளுக்கு பாதி விலைக்கு விற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

எத்தனை நாட்களாக இவர்கள் பழக்கடைகளில் திருடி  வந்துள்ளார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 5 பழ பெட்டிகள் மற்றும் ஒரு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே வேளையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள துரைக்கண்ணு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Published by:Vijay R
First published:

Tags: Koyambedu Market, Thief

அடுத்த செய்தி