ஹோம் /நியூஸ் /சென்னை /

நிமிர்ந்து நில் பட பாணியில் போலி அரசு ஆவணங்களை தயாரித்த இருவர்.. அம்பத்தூரில் அதிர்ச்சி!

நிமிர்ந்து நில் பட பாணியில் போலி அரசு ஆவணங்களை தயாரித்த இருவர்.. அம்பத்தூரில் அதிர்ச்சி!

போலி ஆவணங்களை தயாரித்த இருவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்த இருவர் கைது

யார் யாருக்கெல்லாம் எந்தெந்த அரசு ஆவணங்களை போலியாக  தயாரித்து கொடுத்தார்கள் என போலீசார் விசாரணை

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ambattur | Chennai [Madras]

நிமிர்ந்து நில் படப்பாணியில் அம்பத்தூரில் அரசு ஆவணங்களை போலியாக தயாரித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரில் சிலர் அதிக பணத்திற்காக அரசுதுறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும்,  நிலம் தொடர்பான ஆவணங்களை பத்திர பதிவு செய்து மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக வட்டாட்சியர் ராஜசேகர் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில்.  அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோழம்பேடு பகுதியை சேர்ந்த பினு (41) ஆகிய இருவரையும் போலி ஆவணங்களை தயார் செய்யும் போது கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று ஆள்மாறட்டம், மோசடி, போலி முத்திரை, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ | புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் : லோன்ஆப்பில் கடன் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

 மேலும் கைது செய்யும் நேரத்தில் கையில் வைத்திருந்த, சாதிச் சான்றிதழ் நில அளவை பட்டா பிறப்புச் சான்றிதழ் மற்றும் அரசு பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். 10 க்கும் மேற்பட்ட ரப்பர் ஸ்டாம்புகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுவரை யார் யாருக்கெல்லாம் எந்தெந்த அரசு ஆவணங்களை போலியாக  தயாரித்து கொடுத்தார்கள் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்.

First published:

Tags: Ambattur SI, Cheating, Chennai, Crime News, Local News