ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் இருவேறு பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி வந்த இருவர் கைது... 7 இளம்பெண்கள் மீட்பு!

சென்னையில் இருவேறு பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி வந்த இருவர் கைது... 7 இளம்பெண்கள் மீட்பு!

கல்யாண் குமார் மற்றும் இமாகுலேத் மேரி

கல்யாண் குமார் மற்றும் இமாகுலேத் மேரி

sexual business | சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் 7 பெண்களை மீட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபசாரம் நடைபெறுவதாக விருகம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தலைமை காவலர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த குடியிருப்பில் உள்ள அறையில் வாடிக்கையாளர்கள் பெண்களுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவன அலுவலகம் என்கிற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபசாரம் மேற்கொண்டு வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் சர்வீஸ் அபார்ட்மெண்ட் எடுத்து பாலியல் தொழில் செய்து வந்த கல்யாண்குமார் மற்றும் இமாகுலேத் மேரி ஆகிய 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.

Also see... பாராகிளைடிங் சாகச விபத்தில் கொரிய நாட்டு நபர் மரணம்

அதேபோல திருமங்கலம் திருவள்ளீஸ்வரர் நகரில் விடுதியில் பாலியல் தொழில் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சென்று 4 இளம் பெண்களை மீட்டுள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள விடுதியின் உரிமையாளர் மற்றும் மேனேஜரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுவாக சென்னையில் வேலை தேடி வரும் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Chennai, Sex, Sexual life