ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் ஆமைகள் பாதுகாப்பு மையம்.. ரூ.6.30 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னையில் ஆமைகள் பாதுகாப்பு மையம்.. ரூ.6.30 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

ஆமைகள்

ஆமைகள்

Turtle Conservation Centre : சென்னையில் ரூ.6.30 கோடி மதிப்பில் முதல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆமைகளை பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ஆமைகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்புவது, அரிய வகை ஆமைகளை அழிப்பது போன்ற பல செயல்பாடுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. மொத்தம் 356 ஆமை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  குளிர் ரத்தம் கொண்ட விலங்கினங்களில் ஆமையும் ஒன்று. சுற்றி இருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளக்கூடிய அமைப்பை கொண்டது ஆமைகள்.

ஆமைகள் நீருக்கடியில் முட்டைகளை விடுவதில்லை. கரைக்கு வந்து நிலப்பகுதியிலேயே தனது முட்டைகளை இட்டுச் செல்கின்றன. ஆண் ஆமைகள் தங்களது உடலில் மேலோடு கீழோடு என 2 பாகங்களை கொண்டுள்ளது. எலும்புகளால் ஆன இந்த ஓடுகள் ஆமையின் உடலில் பக்கவாட்டு வரை இணைந்துள்ளன. இந்த ஓடுகள் ஆமையின் உடலில் ஒட்டி இருக்கும். சில உயிரினங்கள் தோலை உரித்துக்கொண்டு வெளியே வருவது போல இந்த ஓட்டிலிருந்து ஆமையினால் வெளியே வர முடியாது.

மூச்சு எடுத்து கொள்வதற்காக நீரிலிருந்து ஆமைகள் மேலே வருகின்றன. பொதுவாக ஆமைகள் ஒரு மணி நேரம் நீருக்கடியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சில ஆமைகள் வாழ்நாள் முழுவதும் நிலப்பகுதியிலேயே வாழ்கின்றன. இன்னும் சில இடங்களில் ஆமைகளை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். சில நாடுகளில் ஆமைகளை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர் அதன் காரணமாகவே கடத்தல் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இதுவே ஆமைகளின் அழிவுக்கு வழி வகுத்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமை பாதுகாப்பு மறுவாழ்வு மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.6.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களிடையே ஆமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஆமைகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

First published:

Tags: Chennai, Tamilnadu government, Tortoise