அம்பத்தூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அதே பள்ளி ஆசிரியை ஷர்மிளா என்பவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற 17 வயது மாணவன் கிருஷ்ணா குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் மாணவனுக்கு சரியாக படிப்பு வரவில்லை இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சிறுவனின் தாயார் தன் மகன் படிப்பு வரவில்லை என்பதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் உயிரிழந்த தன் மகனுடன் பள்ளியின் ஆசிரியை ஒருவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை காண்பித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் பரபரப்பு ஏற்பட்டது.
Read More ; பேட்டரி திருட்டில் கைதானவர் சொன்ன கொலை கதை.. அதிர்ந்த போலீஸ்..!
அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த ஆசிரியை சர்மிளாவை போக்சோ வழக்கில் நேற்று நள்ளிரவில் கைது செய்து விசாரணை செய்ததில் கிருஷ்ணா குமார் ஆசிரியர் சர்மிளாவிடம் டியூசன் சென்று வந்ததும். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு,மிகவும் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் சமீபத்தில் அந்த ஆசிரியைக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டதால் மனமுடைந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் அவசர அவசரமாக அம்பத்தூர் காவல் நிலைத்தில் தற்கொலை வழக்கு பதிவு செய்து வழக்கை முடித்து உள்ளனர்.
மாணவனின் நண்பர்கள் கிருஷ்ண குமாரின் செல்போனில், பள்ளி ஆசிரியையுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படைத்தை பார்த்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சர்மிளாவை கைது செய்து திருவள்ளூர் மகிலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : கண்ணியப்பன்.A.N
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, School student