ஹோம் /நியூஸ் /சென்னை /

பாஜகவை தமிழ்நாட்டில் வளர்ப்பது திமுகவும் திருமாவளவனும்தான் - டிடிவி தினகரன்

பாஜகவை தமிழ்நாட்டில் வளர்ப்பது திமுகவும் திருமாவளவனும்தான் - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

TTV Dinakaran: முதலமைச்சரால் அமைச்சர்களை மட்டுமல்ல, கவுன்சிலர்களை கூட கட்டுப்படுத்த முடியாது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பது திமுகவும், திருமாவளவனும் தான் எனவும், பாஜகவிற்கு பயந்து கொண்டு இருப்பது அதிமுக அல்ல திமுக தான் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மின் கட்டண உயர்வு மற்றும் திமுக அரசின் முறைகேடுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் சென்னையில்  நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று பேசிய டிடிவி தினகரன், தமிழை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்களான திமுகவினர் தற்போது புதிதாக மதத்தையும் கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி மீதிருந்த கோபத்தினால் திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், திமுகவினர் திருந்தி விட்டார்கள் என மக்கள் நினைத்தார்கள். ஆனால் நாங்கள் திருந்தவே மாட்டோம் எனும் அளவிற்கு தற்பொழுது திமுக ஆட்சி இருந்து வருவதாக கூறினார்.

திமுக அமைச்சர்களை போல அதிமுக அமைச்சர்கள் பேசி இருந்தால் அடுத்த நாளே பதவி பறிபோகி இருக்கும் எனவும்,

ஜெயலலிதாவால் தான் அமைச்சர்களுக்கு தூக்கம் இல்லாமல் இருந்தது, ஆனால் தற்போதுள்ள முதலமைச்சரோ அமைச்சர்களால் தூக்கமில்லை என சொல்கிறார். முதலமைச்சரால் அமைச்சர்களை மட்டுமல்ல, கவுன்சிலர்களை கூட கட்டுப்படுத்த முடியாது என கூறினார்.

துரைமுருகன் படித்தவர் , 80 வயதை கடந்தவர் அவரது பேச்சு ஜமீன்தார் போல இருக்கிறது , பொதுவெளியில் ஒரு மருத்துவரிடம் எப்படி நடந்து கொண்டார் , கன்னியாகுமரிக்கு தூக்கி அடிப்பேன் என்கிறார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவினரை எங்கு தூக்கி அடிப்பது. துரைமுருகனின் துச்சாதனன் புத்தி இன்னும் மாறவில்லையே.. மாறாதையா மாறாது.. மனமும் குணமும் மாறாது என்ற பாடல்போலதான்.

திமுகவினர் இந்து மதத்தை பற்றி வகுப்பெடுக்கிறார்கள். ராஜராஜன் சோழ நாட்டு ராஜா , அவர் பட்டையிடும் வழக்கமுள்ள சைவ மதமாகவே இருக்கட்டும். அதற்கு என்ன இப்போ , யார் கேட்டார்கள் . 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சனாதான தர்மம் குறித்து நமக்கு என்ன இப்போது. விஞ்ஞானம் , தொழில்துறை வளர்ச்சி குறித்துதான் தற்போது பேச வேண்டும்.

பாஜகவை தமிழ்நாட்டில் வளர்ப்பது திராவிட மாடல் திமுகவும், திருமாவளவனும் தான். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பயந்து கொண்டு இருப்பது அதிமுக அல்ல திமுக தான். திமுக ஆட்சியின் ஆயுட்காலம் எப்போது வேண்டுமானாலும் அழியும். அதன் அறிகுறிதான் முதலமைச்சர் பொதுக்குழுவிலேயே புலம்புகிறார்

மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைத்திட வேண்டும் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார் எனவும், கடந்த தேர்தலின் போதே கூட்டணி அமைக்க தான் முன் வந்ததாகவும் ஆனால் சிலரின் ஆணவத்தால் கூட்டணி அமையாமல் ஆட்சியையும் இழந்துவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்தும் காலம் வந்துவிட்டதாகவும்  கூறினார். மத்திய அரசு இந்தியை திணிக்க முற்பட்டால், தமிழக மக்களுடன் அமமுகவும் ஒன்றிணைந்து போராடும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Published by:Murugesh M
First published:

Tags: AMMK, BJP, TTV Dinakaran