ஹோம் /நியூஸ் /சென்னை /

மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு 1 சதவீதம் கூட இடமில்லை - ஈபிஎஸ் திட்டவட்டம்

மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு 1 சதவீதம் கூட இடமில்லை - ஈபிஎஸ் திட்டவட்டம்

டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி

Edappadi palanisamy : அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பல திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் டி.டி.வி.தினகரனுக்கு மெகா கூட்டணி அமைவது உறுதி.  அமமுகவிற்கு ஒரு சதவீத இடம் கூட கிடையாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

  டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து சேதத்தை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். பயிர் காப்பீடு காலத்தை நீட்டிக்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 நிவாரணமாக உயர்த்தி தர வேண்டும்.

  இதையும் படிங்க : லவ் டுடே படம் பார்க்க நேரம் இருக்கு.... வெள்ளத்தை பார்வையிட நேரமில்லையா- முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

  தமிழகத்தில் போதைப்பொருள் தடையின்றி கிடைப்பதால் இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பல திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.

  2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான மிகப்பெரிய மெகா கூட்டணியில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் இல்லை”  என தெரிவித்தார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: ADMK, EPS, Tamilnadu