Home /News /chennai /

அரசு பேருந்துகள் தனியாருக்கு தாரைவார்ப்பா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரசு பேருந்துகள் தனியாருக்கு தாரைவார்ப்பா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ரசு போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் இல்லை- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், அது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

    பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார்மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும்,  மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் நேரடியாக இயக்கும் பேருந்துகளை விட, தனியார் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலித்தல், போதிய வருவாய் கிடைக்காத வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க மறுத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்போது அதை தீர்க்க முடியாமல் அரசு தடுமாற நேரிடும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில், அரசுப் பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு  அரசு போக்குவரத்து கழகங்கள் கிராம மக்கள் உள்பட அனைத்து தரப்பு மகளும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது.

    இதையும் படிங்க: சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்! - ராமதாஸ் அறிக்கை

    மேலும், சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட பலருக்கு கட்டணமில்லா பஸ் பயண சலுகையினை வழங்கி வருகிறது’ என்று குறிப்பிட்டாஅர். எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் இல்லை என்றும், அப்படி எந்தவொரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Dr Ramadoss, Govt Bus, Minister Sivasankar

    அடுத்த செய்தி