ஹோம் /நியூஸ் /சென்னை /

அதிகரித்த அபராத தொகை.. குறைந்தது போக்குவரத்து விதிமீறல்கள்.. ஆய்வுகள் கூறுவது என்ன?

அதிகரித்த அபராத தொகை.. குறைந்தது போக்குவரத்து விதிமீறல்கள்.. ஆய்வுகள் கூறுவது என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai traffic | அபராத தொகை உயர்த்தப்பட்ட பிறகு வழக்குகள் பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை உயர்த்தப்பட்ட பிறகு போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதேநேரம், 3 கோடி ரூபாய் கூடுதலாக அபராதம் வசூலாகியுள்ளது. வாகன பெருக்கத்தால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை மத்திய அரசு பன்மடங்கு உயர்த்தி 2019-ல் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சென்னையில் அக்டோபர் 21-ம் தேதி முதல் புதிய அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

புதிய அபராத தொகை நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு மாதத்தில் 1 லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. புதிய அபராத தொகை நடைமுறைக்கு முன்பு சென்னையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 கோடியே 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில்,

புதிய அபராத தொகை நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு மாதத்திற்கு 97 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 கோடியே 73 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.புதிய அபராதத் தொகை விதிக்கப்பட்ட இரண்டு மாதத்தில் 60 சதவீதம் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் குறைந்திருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பழைய அபராத தொகை வசூலிக்கப்பட்ட போது ஹெல்மெட் அணியாததாக மாதந்தோறும் சராசரியாக 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலுக்கு பிறகு இந்த வழக்குகள் எண்ணிக்கை பாதிக்கு கீழ் குறைந்துள்ளது. இதேபோன்று அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிக்னலை மீறி வாகனத்தை இயக்குதல், சீட் பெல்ட் அணியாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது ஆகிய வீதிமீறல்கள் தொடர்பான வழக்குகள் எண்ணிக்கையும் மூன்று மடங்குகள் வரை குறைந்துள்ளது.

First published:

Tags: Chennai, Chennai Traffic, Traffic Rules