தமிழ்நாடு பெண் ஏ.டி.ஜி.பியின் அரசு வாகனம், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ரூ. 500 அபராதம் விதித்து போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு விதிமீறல்களுக்காக அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஏ.டி.ஜி.பி அந்தஸ்து உடைய அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் 3 ஸ்டார் பதித்த வாகனம் ஒன்று நேற்று திருவான்மியூர் பகுதியில் ஒருவழிப்பாதையில் சென்றதை பாரத்த ஒருவர், அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை புகாரில் குறிப்பிடப்பட்ட ஏ.டி.ஜி.பி அந்தஸ்துடைய பெண் அதிகாரியின் வாகனத்தை ஓட்டி வந்த காவலருக்கு ஒரு வழிப்பாதையில் சென்றதற்காக ரூ. 500 அபராதம் விதித்ததுடன் சம்மந்தப்பட்ட காவலருக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The driver has been fined Rs. 500/- for wrong side driving and has paid the fine. He has been warned against repeating the violation. The copy of the Challan is attached. pic.twitter.com/w0pE5tgjfL
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) November 14, 2022
மேலும் புகார் அளித்த நபரின் பதிவுக்கு கீழ் காவலருக்கு விதிக்கப்பட்ட அபராத சலான் மற்றும் நடவடிக்கை குறித்து சமூக வலைதளத்தில் போக்குவரத்து காவல்துறை பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Traffic Police, Traffic Rules