முகப்பு /செய்தி /சென்னை / தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சென்னை - தி.நகரில் போக்குவரத்து மாற்றம்...

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சென்னை - தி.நகரில் போக்குவரத்து மாற்றம்...

போக்குவரத்தில் மாற்றம்

போக்குவரத்தில் மாற்றம்

T.Nagar Traffic Change | தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க தி.நகருக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகைத் தருவார்கள் என்பதால் 8-ம் தேதி முதல் 24-ம் தேதி தி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளிவில் தி.நகர் வட்டார பகுதிக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினை சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது தி.நகர் சாலை, தணிகாசலம் சாலை, ரோகிணி சிக்னல், வடக்கு உஸ்மான் சாலை, கோட்ஸ் சாலை, பிருந்தாவன் மற்றும் கண்ணம்மாபேட்டை சந்திப்பிலிருந்து பனகல் பூங்கா நோக்கி செல்ல தடை செய்யப்படும்.

சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்ல தடை செய்யப்படும். இந்த வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தி.நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

Also see... வேலை வாங்கி தருவதாக பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி கைது

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தி.நகர் சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் மாநகராட்சி பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாட்களில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Deepavali, Diwali, T-nagar, Traffic Rules