முகப்பு /செய்தி /Chennai / சென்னைவாசிகள் கவனத்திற்கு..! முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..

சென்னைவாசிகள் கவனத்திற்கு..! முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Chennai : சென்னையில் போக்குவரத்து காவல்துறை சேத்துப்பட்டு, புரசைவாக்கம், அண்ணாசாலை, எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

சென்னையில் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் சீராக செல்ல வேண்டி போக்குவரத்து காவல்துறை சேத்துப்பட்டு, புரசைவாக்கம், அண்ணாசாலை, எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றம் செய்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து மாற்றம்

மெக்கானிக்கல் சாலையில் உள்ள சேத்துப்பட்டு சந்திப்பில் மாலை நெரிசல் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியும், வாகன ஓட்டிகளின் நன்மை கருதியும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில், ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்பர்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள், சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும் வலது புறம் திரும்ப அனுமதி இல்லை.

அத்தகைய வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி மெக்கானிக்கல் சாலை, டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை மற்றும் மெக்கனிக்கல் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பிற்கு செல்லலாம்.

புரசைவாக்கம் சாலையில் போக்குரத்து மாற்றம்

அதைப்போன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈ.வே.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

அதன்படி, ஈவேரா சாலை-நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து டாக்டர் அழகப்பா சாலை வழியாக செல்ல இயலாது. புரசைவாக்கத்திலிருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி ராஜா அண்ணாமலை சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

அத்தகைய வாகனங்கள் கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி டாக்டர் நாயர் பாயின்ட் சந்திப்பில் வலது மற்றும் இடது புறமாக திரும்பி அல்லது நேராக செல்லலாம்.

காசி திடேட்டர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மேலும், பிள்ளையார் கோயில் தெரு மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் கனரக வாகனங்கள் தவிர கே.கே.நகர் வடபழநி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் காசி பாயிண்ட் சந்திப்பில் இடது புறம் திருப்பி சுமார் 160 மீட்டருக்கு சென்று காசி மேம்பாலம் அடியில் ‘யு’ திருப்பம் மூலம் தங்கள் இலக்கை அடையலாம்.

அசோக்நகர் 12வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தம்மன் கோவில் தெரு வழியாக அசோக் நகர் 11வது அவென்யூக்கு செல்லலாம்.

அண்ணாசலை - தேனாம்பேட்டை

அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் டொயோட்டா ஷோரூம் அருகில் போக்குவரத்து மாற்றம் பரிசோதனை செய்யப்பட்டநிலையில் வாகனங்கள் சீராக சென்றதால் அதை நிரந்தரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, வெங்கட நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்லவிருக்கும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பில் இடது புறம் திரும்பி சுமார் 200 மீட்டர் தூரம் சென்று கார் ஷோரூம் அருகில் ‘யு’ திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம்.

செனடாப் சாலையிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை செனடாப் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி சுமார் 250 மீட்டர் தூரம் சென்று கார் ஷோரூம் அருகில் ‘யு’ திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம்.

பாரதிதாசன் சாலையிலிருந்து அண்ணாசலை - தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் பாரதிதாசன் சாலையில் இடது புறம் திரும்பி சுமார் 300 மீட்டர் தூரம் சென்று கார் ஷோரூம் அருகில் ‘யு’ திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம்.

Must Read : ஒற்றைத் தலைமை விவகாரம்.. எனது நிலைப்பாடு இதுதான்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

மேற்கண்ட போக்குவரத்து மாற்றம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் நல்வரவேற்பை பெற்றுள்ளதாலும் நந்தனம் சந்திப்பு மற்றும் பாரதிதாசன் சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் சீராக செல்வதால் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நிரந்தரமாக செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Anna salai, Chennai, Traffic, Traffic Police