முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களே அலெர்ட்... நாளை (வெள்ளிக்கிழமை) இந்த இடங்களில் மின்தடை அறிவிப்பு..

சென்னை மக்களே அலெர்ட்... நாளை (வெள்ளிக்கிழமை) இந்த இடங்களில் மின்தடை அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Power Shut Down : சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “சென்னையில் நாளை (24.02.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, போரூர், அம்பத்தூர், கே.கே.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

கிண்டி : ராஜ்பவன், பரங்கிமலை, மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், ஆதம்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், புழுதிவாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர் : திருமழிசை அன்னைக்கட்டுசேரி, வயலானல்லூர், சித்துகாடு பூந்தமல்லி மாங்காடு பெரியார் நகர், பவித்திரா நகர், சிப்பாய் நகர், முருகபிள்ளை நகர், ஜெ.ஜெ,நகர், ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி, லீலாவதி நகர் திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, போலீஸ் குடியிருப்பு, ஷர்மா நகர், மங்களாபுரி நகர், திருமுடிவாக்கம் சிட்கோ, டவர்லைன் சாலை, கலைஞர் தெரு, நல்லூர் கிராமம், எம்.ஜி,ஆர்.நகர் எஸ்.ஆர்.எம்.சி. தெள்ளியார் அகரம், தனலட்சுமி நகர் ஒரு பகுதி, முத்தமிழ் நகர் காவனூர் சேக்கிழார் நகர், துரைசாமி சாலை, தேவி கருமாரியம்மன் நகர் கோவூர் குன்றத்தூர் ஒருபகுதி, அம்பாள் நகர், சத்யா நகர் ஐயப்பந்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி ரோடு, சுவாமிநாதன் நகர், கன்னிகாபுரம், டி.ஆர்.ஆர். நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி : அன்னை நகர் டி.வி.எஸ். நகர், பள்ள தெரு, பார்த்தசாரதி தெரு.

கே.கே.நகர் பகுதி : அசோக் நகர் முழுவதும், எம்.ஜி.ஆர்.நகர் முழுவதும், ஈக்காட்டுதாங்கல், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, நெசப்பாக்கம், வடபழனி ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்து மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது"  என்று கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Local News, Power Shutdown