முகப்பு /செய்தி /சென்னை / மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சென்னை கோயம்பேட்டில் தக்காளியின் விலை ரூ. 40ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ரூ. 12 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. கடந்த சில தினங்களாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வருகை தரும் தக்காளியின் வரவு கணிசமாக குறைந்துள்ளது.

தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளிகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று 43 லாரிகள் மட்டுமே வருகை புரிந்தது. இதன் காரணமாக தற்போது தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.

ALSO READ | உயிருக்கு போராடி வரும் நித்தியானந்தா! இலங்கையில் தஞ்சமடைய ரணிலுக்கு கடிதம்!

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூபாய் 24 முதல் ரூபாய் 28 வரை விற்று வந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விலை ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 12 ரூபாய் வரை தக்காளியின் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

First published:

Tags: Chennai, Koyambedu, Koyambedu Market, Tamilnadu, Tomato, Tomato Price