Home /News /chennai /

மீண்டும் அதிகரித்த தக்காளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா?

மீண்டும் அதிகரித்த தக்காளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா?

தக்காளி விலை

தக்காளி விலை

சென்னையில் மட்டுமே 1200 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், 600 டன் மட்டுமே வந்துள்ளதால், தொடர்ந்து தக்காளியின் விலை அதிகரித்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
    சென்னை கோயம்பேட்டில் நேற்று குறைந்த தக்காளியின் விலை மீண்டும் இன்று 12 ரூபாய் உயர்ந்து கிலோ தக்காளி 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி புற்று வட்டார பகுதியில் ஒரு கிலோ தக்காளி, நான்கு ரகங்களில் அதிகபட்சமாக ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.  இந்த நிலையில் தமிழக அரசின் நுகர்வோர் பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 க்கு சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும்  கனமழை காரணமாகவும்  கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையாலும் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவால், அத்தியாவசிய காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    Gradual increase in the price of tomatoes - 70 rupees per kilo of tomatoes sold
    Gradual increase in the price of tomatoes - 70 rupees per kilo of tomatoes sold


    கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக 7000 டன் அத்தியாவசிய காய்கறிகள் வரத்து வரும் நிலையில் இன்று 5000 டன் மட்டுமே வந்துள்ளதால், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.  அதேபோல் சென்னையில் மட்டுமே 1200 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், 600 டன் மட்டுமே வந்துள்ளதால், தொடர்ந்து தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தக்காளி கிலோ 12 ரூபாய் அதிகரித்து, கோயம்பேட்டில் கிலோ 42 ரூபாய்க்கும் சென்னையின் புறநகர் பகுதிகளில் ரூ. 40முதல் 50  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ALSO READ | தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

    இதே போன்று, முருங்கைக்காய் 1 கிலோ 110ரூபாய்க்கும், கேரட் 1 கிலோ 80 ரூபாய்க்கும்,எலுமிச்சை 1கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காய்கறிகளின் விலை சாமானிய மக்கள் கவலையடைந்துள்ளனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Koyambedu, Koyambedu Market, Tomato, Tomato Price

    அடுத்த செய்தி