ஹோம் /நியூஸ் /சென்னை /

பயணிகளின் வசதிக்காக சென்னை பேருந்துகளில் வரும் புதிய சேவை... இன்று முதல் அறிமுகம்!

பயணிகளின் வசதிக்காக சென்னை பேருந்துகளில் வரும் புதிய சேவை... இன்று முதல் அறிமுகம்!

சென்னை மாநகர பேருந்து

சென்னை மாநகர பேருந்து

Chennai bus | பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஸ்பீக்கர் உதவியுடன் பயணிகள் அறிந்துகொள்ளும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் பெரும்பாலான மக்கள், பொது போக்குவரத்தையே நம்பியுள்ளனர். அதிலும் குறிப்பாக பேருந்தை அதிகமாகவே உபயோகப்படுத்துகின்றனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் பயணிகள் பேருந்து நிறுத்தங்களை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. நடத்துனரும் அவ்வபோது பேருந்து நிறுத்தங்களை கூறுவதற்கு தவறுகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்த சிரமத்தை போக்கும் வகையில், சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஸ்பீக்கர் உதவியுடன் பயணிகள் அறிந்துகொள்ளும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. பயணிகள் அடுத்து வரவுள்ள பேருந்து நிறுத்தங்களை இந்த வசதி மூலம் 300 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே ஸ்பீக்கர் வாயிலாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்டுக்கொள்ள முடியும்.

இதற்காக பேருந்துகளின் உட்புறத்தில் மொத்தம் 6 ஸ்பீக்கர்கள் பொருத்தப்படுகின்றன. ஜிபிஎஸ் வசதியில் இயங்கும் இச்சேவையில் பேருந்து நிறுத்த அறிவிப்புகளுக்கு இடையே விளம்பரங்களை ஒலிபரப்பி அதன் மூலம் வருவாய் திரட்டவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும்,பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவும், 2,200 மாநகர பேருந்துகளில் நவம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்திருந்தது.

First published:

Tags: Bus, Chennai, Passengers, Public Transport