Home /News /chennai /

அக்டோபர் முதல் புதன்கிழமைதோறும் தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அக்டோபர் முதல் புதன்கிழமைதோறும் தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி முகாம்

தடுப்பூசி முகாம்

பூஸ்டர் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்குவதற்கான  காலக்கெடு வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    அக்டோபர் முதல் கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் முதல் 16 வயது உடையவர்களுக்கு புதன் கிழமைகளில் 13 வயதான தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று 37-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 50,000 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.  நடைபெறுகிறது. சென்னையில் 2,000 இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

    சென்னை தி.நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் இலவச தடுப்பூசி தொடருமா ?  என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்
    அக்டோபர் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது.

    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் தடுப்பூசிகள் புதன்கிழமைகளில் போடப்படும்  என்றும்  அக்டோபர் முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பிறந்த குழந்தை முதல் 16 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வரை என 13 வகையான தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    Read More: காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

    அடுத்த வாரம் நடைபெறும் 38-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் கடைசி தடுப்பூசி முகாமாக இருக்க வாய்ப்பு என தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செப்டம்பர் 30ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவு பெறுகிறது என்றும் அதன் பின் பூஸ்டர் டோஸ் தப்பூசிக்கு சலுகை கிடைக்குமா என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

     

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Covid-19, Vaccination

    அடுத்த செய்தி