தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகளையும் வழங்கி வருகிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் நகரப் பேருந்துகளையும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தொலைதூர பேருந்துகளையும் இயக்கி வருகிறது. மற்ற போக்குவரத்துக் கழகங்கள் இருசேவைகளிலும் கணிசமான பேருந்துகளை இயக்கி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இயங்கி வரும் 3 பேருந்து முனையங்களை நவீனமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1,543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து முனையங்கள் நவீனமயமாக்கப்படவுள்ளன.
திருவான்மியூர் பேருந்து முனையம் ரூ.446 கோடி மதிப்பிலும், வடபழனி பேருந்து முனையம் ரூ. 610 கோடி மதிப்பிலும், வியாசர்பாடி ரூ.485 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்பட உள்ளன
மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்காத வகையிலும், மழைநீர் வடிகால் வசதியுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.
Also Read : தகதகவென தங்கமாக ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்.. வைரல் போட்டோஸ்!
வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமமின்றி பேருந்து நிலையங்களைப் பயன்படுத்த வழிவகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.