Home /News /chennai /

'கஞ்சா கேக்' சென்னையில் புதிய வகை போதை பொருள் விற்பனை... திடுக்கிடும் தகவல்கள்

'கஞ்சா கேக்' சென்னையில் புதிய வகை போதை பொருள் விற்பனை... திடுக்கிடும் தகவல்கள்

வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

"தாங்கள் விற்பனை செய்யும் போதை பொருட்கள் உட்கொண்டால் 12 மணி நேரம் வரை நிலாவில் மிதப்பது போல இருக்கும்" என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் என்ற புதிய வகை போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் கஞ்சா கேக் வாங்குவது போல சென்று நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரோஷன்(27) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது ரோஷன் நுங்கம்பாக்கத்தில் உணவு கடை நடத்தி வருவதாகவும் அவரும் அவரது நண்பரான டாட்டூக்கடை நடத்தி வரும் தாமஸ் என்பவரும் இணைந்து கஞ்சா கேக் தயாரித்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

இதனை எடுத்து நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸ்(26) என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இவர்கள் கஞ்சா கேக்குடன் உயரக போதை மாத்திரை, உயர் ரக போதை ஸ்டாம்ப் ஆகியவற்றையும் கல்லூரி மாணவர்கள் மற்றும் டிஜே பார்ட்டிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு… உத்தரவு பிறப்பிக்கப்டும் தேதி அறிவிப்பு

இவர்கள் தங்கள் நண்பர்களோடு இணைந்து போதை மாத்திரையை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி அவற்றை சென்னையில் பல மடங்கு லாபம் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதும்தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின் படி காரனோடையைச் சேர்ந்த ஆர்க்கிடெக் மாணவரான கார்த்திக்(24), பொன்னேரியைச் சேர்ந்த எம்எஸ்சி மாணவரான ஆகாஷ் (22), பொன்னேரியைச் சேர்ந்த பி.டெக் மாணவரான பவன் கல்யாண் (24) ஆகியோரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ரோஷன் மற்றும் தாமஸ் ஆகியோர் குறைவான விலைக்கு கஞ்சா வாங்கி அதனை யாருக்கும் சந்தேகம் வராதபடி சாப்பிடும் கேக்குடன் இணைத்து கஞ்சா கேக் செய்து வந்துள்ளனர். இப்படி செய்யப்படும் கஞ்சா கேக் ஒன்று 3 ஆயிரம் ரூபாய் வரை கல்லூரி இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதேபோல இவர்களது நண்பர்களான கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் ஆகியோர் பட்டப்படிப்பு படித்துள்ளதால் படிப்பறிவை வைத்து பெங்களூர், ஹைதராபாத் போன்ற பகுதிகளில் உயர் ரக போதை பொருட்கள் இருக்கும் இடங்களை தெரிந்துகொண்டு, உயர்ரக போதை மாத்திரைகள், உயர்ரக போதை ஸ்டாம்புகள் ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து பின் ஆகாஷ், கார்த்தி ஆகியோர் இருசக்கர வாகனங்கள் மூலம் நேரடியாக சென்று பெற்று வந்துள்ளனர் என தெரியவந்தது.

"தமிழகத்தில் 282 பேருக்கு H1N1 காய்ச்சல் பாதிப்பு" - அமைச்சர் மா.சு

ஒரு போதை மாத்திரையை ரூ. 1300 க்கு வாங்கி அதனை 3000 வரையிலும், அதே போல உயர்ரக போதை ஸ்டாம்ப் ஒன்றை ரூபாய் 1000-க்கு வாங்கி அதனை 2800 வரையிலும் விற்பனை செய்து வந்துள்ளனர்.

டாட்டூ கடை நடத்தி வரும் தாமஸ் என்பவரது கடைக்கு டாட்டு போட வரும் ஆண்கள் மற்றும் பெண்களை குறி வைத்து தங்களுக்கான வாடிக்கையாளர்களாக தாமஸ் மாற்றி வந்துள்ளார்.
மேலும், அவர்கள் மூலம் கிடைத்த வாடிக்கையாளர்களை பிடித்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இவர்கள் கஞ்சா கேக், உயர் ரக போதை மாத்திரைகள் உயர் ரக போதை ஸ்டாம்ப் ஆகியவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலங்களில் வேலை இன்றி இருந்ததால் போதை பொருள் விற்பனையில் ஐந்து நபர்களும் இறங்கி போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக சனிக்கிழமை இரவுகளில் சென்னையில் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் டி.ஜே. பார்ட்டிகளில் ஆண் பெண்களை குறி வைத்து அந்த நட்சத்திர விடுதியின் வெளியே இருசக்கர வாகனத்தில் வந்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

"தாங்கள் விற்பனை செய்யும் போதை பொருட்கள் உட்கொண்டால் 12 மணி நேரம் வரை நிலாவில் மிதப்பது போல இருக்கும்" என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 33 உயர் ரக போதை மாத்திரைகள், 19 உயர்ரக போதை ஸ்டாம்புகள், 10 கஞ்சா கேக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Musthak
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி