ஹோம் /நியூஸ் /சென்னை /

அண்ணன்கள் மு.க.முத்து, மு.க.அழகிரி... நினைவுகளால் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

அண்ணன்கள் மு.க.முத்து, மு.க.அழகிரி... நினைவுகளால் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

மு.க.ஸ்டாலினுடன் அழகிரி, முத்து

மு.க.ஸ்டாலினுடன் அழகிரி, முத்து

பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என்று சொன்னார் எனது தந்தை கருணாநிதி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பள்ளியில் பயின்றவர் என்பதால், அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பேசியதாவது:- இங்கே நம்முடைய தமிழாசிரியர் அய்யா ஜெயராமன் பேசுகிறபோதுகூட சொன்னார். என்னுடைய அண்ணன் முத்து இங்கு தான் படித்தார்.  என்னுடைய அண்ணன் அழகிரியும்  இங்குதான் படித்தார்.  அவர்களைத் தொடர்ந்து நானும் இங்கு தான் படித்தேன். அவர்கள் படித்துக் கொண்டிருப்பதால் என்னையும் இங்கே சேர்க்க வேண்டுமென்று, எங்களையெல்லாம் கண்காணித்துக்கொண்டு, குடும்ப பொறுப்பேற்றுக்கொண்டு இருந்தவர் மறைந்த  முரசொலி மாறன். என்னுடைய மாமா அவர். அவர்தான் பொறுப்பேற்று இருந்தார். பொறுப்பேற்றுக்கொண்டு எங்களையெல்லாம்  படிக்க வைத்தார்.

என்னை இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தார். ஏற்கனவே நான் ஒன்றாவதிலிருந்து ஆறாவது வரை படிப்பதற்கு சர்ச் பார்க் கான்வென்டில் சேர்ப்பதற்கான முயற்சியில் என்னையும் என்னுடைய தங்கை செல்வியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முயற்சித்தார். அட்மிஷன் கிடைத்தது.

அட்மிஷன் கிடைத்து ஸ்கூலில் கொண்டு போய் சேர்க்கின்றநேரத்தில், என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று பள்ளியில் சொல்லிவிட்டார்கள். ஸ்டாலின் என்கிற பெயர் இருக்கக்கூடாது. ரஷ்யாவில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சிலையெல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த சூழ்நிலையில் இந்தப் பெயரை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெயரை மாற்றுங்கள். மாறன்தான் எங்களை ஸ்கூலுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.  சர்ச் பார்க் கான்வென்டில் இடம் கிடைப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இப்போது சுலபமாக கிடைத்துவிடும் அதுவேறு.

இதையும் படிங்க: நுழைவுத்தேர்வில் பெயில்... மேயர் சிபாரிசில் சீட் வாங்கி படித்தேன்... மு.க.ஸ்டாலின் பள்ளி நினைவுகள்!

அப்பொதெல்லாம் ஸ்கூலை பொறுத்தவரைக்கும் ஒன்றாவதிலிருந்து ஆறாவது வரை படிக்கிற பள்ளியைப் பொறுத்தவரைக்கும் சர்ச் பார்க்கில் இடம் கிடைப்பது என்பது அவ்வளவு அபூர்வம்.  அதுமாதிரி, ஆறாவதிலிருந்து 11-ஆவது வரை ஒரு பள்ளியில் சேரவேண்டுமென்றால், இந்த கிறிஸ்டியன் காலேஜ்  மேல்நிலைப்பள்ளியில் இடம் கிடைக்கிறது என்றால் மிகவும் அபூர்வம். கிடைப்பது கஷ்டம். அப்போது முரசொலி மாறன் என்னுடைய தந்தையிடத்தில் சென்று பெயரை மாற்றச் சொல்கிறார்கள் அப்போது தான் அட்மிஷன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள் என்றார்.  பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என்று சொன்னார் எனது தந்தை கருணாநிதி.

அதற்குப்பிறகு பக்கத்தில் இருக்கின்ற மான்டேசெரி ஸ்கூலில் கொண்டு போய் சேர்த்தார்கள். என்னால் என்னுடைய தங்கையும் அங்கு படிக்க முடியாமல் போய்விட்டது. அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.' என்று பேசினார்.

First published:

Tags: MK Alagiri, MK Stalin