Home /News /chennai /

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.195 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.195 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.195 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவ சேவைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200ஆவது ஆண்டு தினம் கொண்டாடுவதை முன்னிட்டு, மருத்துவமனை வளாகத்தில் ரூ.65.60 கோடி செலவில் கட்டப்பட்ட மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்வின் போது பல்வேறு மருத்துவமனைகளில் ரூ.63.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. ரூ.65.45 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். 26 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வாங்கப்பட்ட மின்கல ஊர்திகளை கொடி அசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் 237 பேருக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் செயலாளர் செந்தில்குமார் , பல்வேறு மருத்துவக் கல்லூரியின் முதல்வர்கள் இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில் என்ன இருக்கிறது? ஆறுமுகசாமி எக்ஸ்கிளூசிவ் பேட்டி

    தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காவல்துறையில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணி தரப்படும் நிலையில், அடையாளமாக 8 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் அளித்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: CM MK Stalin, Health and welfare department

    அடுத்த செய்தி