ஹோம் /நியூஸ் /சென்னை /

தொழிலாளி ஒருவருக்கு மட்டும் ரூ.100 கூலி உயர்வு : ஆத்திரத்தில் சக தொழிலாளிகளே கொலை செய்த கொடூரம்!

தொழிலாளி ஒருவருக்கு மட்டும் ரூ.100 கூலி உயர்வு : ஆத்திரத்தில் சக தொழிலாளிகளே கொலை செய்த கொடூரம்!

மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை

மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை

Chennai | கட்டுமான மேஸ்திரி ஆனந்தனுக்கு மட்டும் அதிக கூலி கொடுத்ததாகவும், ஆனந்தனை புகழ்ந்து பேசி மற்றவர்களை தாழ்த்தி பேசியதாகவும் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தவரை உடன் வேலை செய்த மூவர் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் 10வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த  சென்ட்ரிங்  தொழிலாளி ஆனந்தன் (22) மாடியில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், ஆனந்தனின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில் ஆனந்தனுடன் உடன் வேலை பார்த்தவர்கள் அவரை கீழே தள்ளி விட்டு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சக தொழிலாளிகளான சக்திவேல்(25), பிரசாந்த்(25), கொத்தனார் சீனிவாசன்(25) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

  ALSO READ | திருச்சியில் மொபைல் திருடியதாக கைதானவர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு… லாக் அப் மரணமா? விசாரணை தீவிரம்

  கட்டுமான மேஸ்திரி ஆனந்தனுக்கு மட்டும் அதிக கூலி கொடுத்ததாகவும், ஆனந்தனை புகழ்ந்து பேசி மற்றவர்களை தாழ்த்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆனந்தனை அழைத்து சென்று மது குடிக்க வைத்து மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். முன்னுக்குபின் முரணாக பேசுவதால், போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: வினோத்கண்ணன், ஈசிஆர்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Murder, Velacherry