Home /News /chennai /

கவிஞர் கபிலன் மகள் தூரிகை தற்கொலைக்கு இதுதான் காரணமா? போலீஸ் விசாரணை சொல்வது என்ன?

கவிஞர் கபிலன் மகள் தூரிகை தற்கொலைக்கு இதுதான் காரணமா? போலீஸ் விசாரணை சொல்வது என்ன?

கபிலன், தூரிகை

கபிலன், தூரிகை

தற்கொலைக்கு எதிரான எண்ணம் கொண்ட தூரிகை, “பிரச்சினைகளுக்கு தற்கொலை முடிவு அல்ல” என பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியது தான் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன். இவரது மகள் தூரிகை, எம்.பி.ஏ. படித்து முடித்து விட்டு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூரிகை தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தூரிகை பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், தூரிகையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் வயதில் தூரிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்துள்ளார். முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்த தூரிகை, 'Being Women Magazine'எனும் இதழை நடத்தி வந்தார்.

    பெண்களைக் கொண்டாடுவதுதான் இந்தப் பத்திரிகையின் நோக்கம் என்றும் அப்போது தெரிவித்திருந்தார். மேலும் 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் தூரிகை நடத்தி வந்தார். Fashion designing-ல் திறன் பெற்ற இவர் பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

    இதையும் வாசிக்க: மின் கட்டண உயர்வுதான் திராவிட மாடல் போலும்... ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

    தற்கொலைக்கு எதிரான எண்ணம் கொண்ட தூரிகை, “பிரச்சினைகளுக்கு தற்கொலை முடிவு அல்ல” என பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
    இதனிடையே தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூரிகையை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Crime News, Marriage, Suicide

    அடுத்த செய்தி