முகப்பு /செய்தி /சென்னை / வண்ணாரப்பேட்டையில் தோழியின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து மிரட்டிய வாலிபர் கைது

வண்ணாரப்பேட்டையில் தோழியின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து மிரட்டிய வாலிபர் கைது

திருவொற்றியூர் காவல்நிலையம்

திருவொற்றியூர் காவல்நிலையம்

Blackmail person Arrest | விசாரணையில் குற்றவாளி கரூர் நகர காவல் நிலையத்தில் CCTNS Operator ஆக வேலை செய்து வருகிறார் என்பது தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை வண்ணாரப்பேட்டையில் தோழியின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை  சேர்ந்த 33வது பெண் தனியார் நிறுவனத்தில் செய்து வருகிறார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதுப்பேட்டை சேர்ந்த அரவிந்தசாமி(27) என்பவரும் அந்த பெண்ணும் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அலுவலகம் தொடர்பான தேர்வின் போது

தனது செல்போனை நண்பரான அரவிந்தசாமியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

அப்பொழுது மீனா செல்போனிலிருந்து அவருடைய அந்தரங்க புகைப்படத்தை திருடி வைத்துக்கொண்டு மீனாவிடம்  செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் உறவுக்கு அழைத்து ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் இவருடைய அந்தரங்க புகைப்படத்தை சமூக வளத்தலைகளில் பதிவிட்டு விடுவதாக அரவிந்தசாமி மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரின்பேரில் அரவிந்தசாமியை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அரவிந்தசாமி கரூர் நகர காவல் நிலையத்தில் CCTNS Operator ஆக வேலை செய்து வருகிறார் என்பது தெரிய வந்தது.மேலும் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அரவிந்த்சாமியை புழல் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: அசோக் குமார்

First published:

Tags: Chennai, Crime News