ஹோம் /நியூஸ் /சென்னை /

பணியின்போது புகைப்படக் கலைஞர் நெஞ்சுவலியால் மரணம் - சொர்க்கவாசல் திறப்பின்போது நடந்த சோகம்..!

பணியின்போது புகைப்படக் கலைஞர் நெஞ்சுவலியால் மரணம் - சொர்க்கவாசல் திறப்பின்போது நடந்த சோகம்..!

மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன்

மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன்

சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை சிறப்பான வகையில் புகைப்படம் எடுக்கும் பணியில், தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் உயிரிழப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை  புகைப்படம் எடுக்கும் பணியில், பிரபல தனியார் நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்டு பணியின் போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

இந்த சம்பவம் ஊடகத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் எடுக்க சென்று உயிரிழந்த மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவுக்கு செய்தித்துறையினரும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chennai