கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ஆளுநர், தமிழ்நாட்டை தமிழகம் என்றே அழைக்கலாம் என பேசியிருந்தார். மேலும், நேற்று சட்டப் பேரவையில் தனது உரையில் திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்ட வார்த்தைகளையும் தவிர்த்திருந்தார். தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கருத்து தெரிவித்ததை எதிர்த்து பல்வேறு அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரை கண்டித்து வருகிற 13 ஆம் தேதி மாலை, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்" அறிவித்தார்.
இந்நிலையில் மாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 'ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்' காலை 10.00 மணிக்கே நடைபெறுமென தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அதே அறிக்கையில் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் வருகின்ற 19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குகள் பதிந்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழுவின் 4 உறுப்பினர்கள் கொண்ட துணை குழு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Governor, Protest, Pudukottai, RN Ravi, Thirumavalavan