முகப்பு /செய்தி /சென்னை / ஆடி, ஜாக்குவார் காரில் வந்து சென்னையில் கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள்.. சிசிடிவி கேமராவை பார்த்து அதிர்ந்த போலீஸார்

ஆடி, ஜாக்குவார் காரில் வந்து சென்னையில் கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள்.. சிசிடிவி கேமராவை பார்த்து அதிர்ந்த போலீஸார்

சொகுசு காரில் வந்து செருப்பு கொள்ளை

சொகுசு காரில் வந்து செருப்பு கொள்ளை

சொகுசு காரில் சென்று சொகுசு பங்களாக்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் இர்பான் அவர் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கிராமத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், பிரபல தொழிலதிபர்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக முதல்வரின் மருமகன் வீடு, நடிகர் விஜய், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பட்டியல்கள் நீண்டுகொண்டே செல்லும் அளவிற்கு மிகவும் முக்கியமானவர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 6ம் தேதி நள்ளிரவில் நீலாங்கரை, புளு பீச் சாலை, கேஷ்சுரினா டிரைவ் பகுதியில் ஜாக்குவார் சொகுசு காரில் வந்த மூன்று நபர்கள் தொழிலதிபர்களின் வீடுகளில் ஆயுதங்களோடு இறங்கி கொள்ளையடிக்க சென்றுள்ளனர். சினிமா கதையை மிஞ்சும் வகையில் முக்கிய பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் அதிகளவு பாதுகாப்பு பணியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் துணிச்சலாக இரவில் வீட்டுக்குள் புகுந்து அடுத்தடுத்து மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து விட்டு சொகுசு காரில் தப்பி தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.

தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீடு, டிவிஎஸ் குழும உரிமையாளர் வீடு என அடுத்தடுத்து மூன்று வி.ஐ.பி வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து தோல் தொழிற்சாலை நடத்தி வரும் தொழிலதிபர் சுமார் 45-வயதான நாயர் சுல்தான் வீட்டில் ஒரு ஜோடி செருப்பு மற்றும் பர்சில் இருந்த ரூபாய் 1000 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நீலாங்கரை ஆய்வாளர் மகேஷ்குமார், அவர் தலைமையில் உதவி ஆய்வாளர் திருஞானம் உள்ளிட்ட காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து விசாரிக்க தொடங்கினர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பதிவான காட்சியை பார்த்து அதிர்ந்து போயினர்.

கொள்ளையடிக்க வந்தவர்கள் விலை உயர்ந்த சொகுசு காராக பார்க்கப்படும் ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் முன்பு நன்றாக நோட்டமிட்டு பின்னர் இரவு நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் புகுந்துள்ளனர். பின்னர் சிசிடிவி காட்சியில் பதிவான காரின் பதிவெண்ணை எடுத்து முகவரி பார்த்தபோது அது போலியானது என தெரியவந்தது. பின்னர் ஒவ்வொரு சிசிடிவியாக பார்த்துச் சென்று, திருவள்ளூர் அருகே சோழவரம் டோல்கேட்டை கடந்த போது வாகன எண் மாற்றப்பட்டுள்ளதும், இதனை வைத்து தீவிரமாக தேடிய போலீசார் வாகனத்தின் உரிமையாளர் தனபால் சிங் என்பவரை கண்டறிய டெல்லிக்கு விமானத்தில் பறந்து விரைந்து சென்றனர்.

Also Read:  தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

அங்கு சென்று விசாரித்த போது அவர் உத்திர பிரதேசத்தில் உள்ள சுனில் குமார் யாதவ் என்பவருக்கு காரை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் உத்திர பிரதேசத்திற்கு விமானத்தில் பறந்த தனிப்படையினர், அங்கிருந்த சொகுசு காரில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புனித்குமார் மற்றும் அவரது சகோதரரான 30-வயதான ரமேஷ் குமார் யாதவ் இருவரையும் அங்குள்ள போலீசாரின் உதவியுடன் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் திரைப்பட பாணியில் காரில் துரத்தி சென்று துப்பாக்கி முனையில் கைது செய்த பின்னர் சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இருவரையும் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியதாக போலீசார் தெரிவித்தனர். உத்திரபிரதேசம் காசியாபாத்தில் இருந்து சொகுசு காரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வந்த முக்கிய குற்றவாளியான பீகாரை சேர்ந்த இர்பான் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இர்பான் மனைவி அங்கு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சொகுசு காரில் சென்று சொகுசு பங்களாக்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் இர்பான் அவர் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கிராமத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இர்பான் டெல்லி ஆக்ரா, அஜ்மீர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு ஆடி, ஜாக்குவார், லேண்ட்ரோவர் இதுபோன்ற சொகுசு கார்களில் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் சுனில் குமார் யாதவ் மீது இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், 2019ம் ஆண்டு முதல் கொலை வழக்கில் சிறையில் இருந்த நிலையில், 2022ம் ஆண்டு கொள்ளை வழக்கில் சிறை சென்ற இர்பான் மற்றும் சுனில் குமார் யாதவ் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும் பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இருவரும் ஒன்றிணைந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

பின்னர் கூகுள் மூலம் தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் உள்ள இடத்தை பார்த்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியை தேர்ந்தெடுத்து பின்னர் உத்திர பிரதேசத்தில் இருந்து ரூபாய் 80,000த்திற்கின் சொகுசு காரான ஜாகுவார் காருக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு சுனில் குமார் யாதவ்(28) மற்றும் இர்பான்(27), சுனில் குமார் யாதவின் ஓட்டுநராக 26- வயதான புனித் குமார் மூன்று வீடுகளில் கொள்ளையடிக்க புகுந்து அதில் ஒரு வீட்டில் மட்டும் ஒரு ஜோடி செருப்பும், ரூபாய் 1000 மட்டும் கொள்ளையடித்து சென்றதும் விசாரணையில் கூறியதாக தெரிவித்தனர். கைதான இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான இர்பான் மற்றும் சுனில் குமார் யாதவ் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கூட சொகுசு காரில் சென்று கொள்ளையடிக்க நோட்டமிட்டு கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்ற சம்பவம் அரங்கேறியதில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து 80,000 ரூபாய் செலவு செய்து வெறும் ஒரு ஜோடி செருப்பும், ஆயிரம் ரூபாயும் பணம் மட்டும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி அவர்களது சொந்த ஊருக்கு சென்றவர்களை விமானத்தில் பறந்து துரத்தி சென்று கைது செய்த சென்னை நீலாங்கரை காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் உள்ளிட்ட தனிப்படையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் : வினோத் கண்ணன்

First published:

Tags: Chennai, Jaguar, Theft