ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆயுதபூஜை விடுமுறையில் 8 லட்சம் மதிப்பிலான லேப்டாப், கேமரா திருட்டு - ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது

ஆயுதபூஜை விடுமுறையில் 8 லட்சம் மதிப்பிலான லேப்டாப், கேமரா திருட்டு - ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது

3 திருடர்கள் கைது

3 திருடர்கள் கைது

chennai | ஆயுதபூஜை விடுமுறையை பயன்படுத்தி  6க்கும் மேற்பட்ட கடைகளில் 8 லட்சம் மதிப்பிலான லேப்டாப், கேமரா திருடிய 3 சரித்திர பதிவேடு கொள்ளையர்களை கைரேகையை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விவேகானந்தா பள்ளி எதிரில் உள்ளது எம்.கே.எஸ் காம்ப்ளக்ஸ். இங்குள்ள முதல் தளத்தில் 7 கடைகள் உள்ளன. இந்த கடைகளை கடந்த 7ம் தேதி இரவு 10 மணியளவில் வழக்கம் போல் ஆயுத பூஜையை நடத்திவிட்டு பூட்டி விட்டு சென்றனர். மீண்டும், 11ஆம் தேதி காலை சுபம் கன்சல்டன்ஸின் உரிமையாளர் நாகராஜ் வழக்கம்போல கடையை திறக்க வந்தார்.

  அப்போது அனைத்து கடைகளின் பூட்டும் உடைத்து அதில் இருக்கும் பணம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனே மற்ற கடைக்காரர்களுக்கும் தகவல் கூறி அங்கே வந்தனர்.இதில், திருவேற்காடு பகுதியை சேர்ந்த பிரவீன் (27) எஸ்.ஆர். டென்டல் கேர் நடத்தி வருகிறார். இவரது கடையில் ஒரு லேப்டாப் 3,000 பணத்தை திருடிச் சென்றுள்ளனர். ஆவடி காமராஜர் நகர் பகுதியைசேர்ந்த பிரதீப் குமார் (44) பவுன் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது கடையில் 19000 மதிப்புள்ள இரண்டு கேமரா மற்றும் 7,3500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

  மேலும் ஆவடி ராஜ் பாய் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (39) சுபம் கன்சல்டன்சி நடத்தி வருகிறார். இவரது கடையில் 30000 மதிப்புள்ள ஒரு லேப்டாப்-ஐ கொள்ளையடித்துள்ளனர். மேலும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (40) ஸ்டைல் சோன் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 2,10,000 மற்றும் 25000 மதிப்புள்ள பொருட்களும் திருட்டு போனது ஆவடி தெரிய வந்துள்ளது.

  கோவர்தனகிரி பகுதியை சேர்ந்த சதீஷ் (50) சுவாதி பியூட்டி பார்லர் கடையில் ரூ.1500 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடி வசந்த நகர் பகுதியை சேர்ந்த கவுஸ் (54) ஜி.என் டெக்ஸ் கடை நடத்தி வருகிறார். இதில், ஒரு கடை காலியாக இருந்த நிலையில், ஆறு கடைகளின் பூட்டை உடைத்து, அதில் இருக்கும் விலை மதிப்புள்ள இரண்டு கேமரா மற்றும் 8 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

  உடனே இது குறித்து ஆவடி காவல் துறை அதிகாரிகளுக்கு  தகவல் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பவதன்று ஆவடி வசந்த நகர் பகுதியில் ஆட்டோவில் 3 நபர்கள் வந்துள்ளனர்.

  அவர்கள் ஆட்டோவை அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு இருவர் மட்டும் விவேகானந்தா பள்ளி எதிரில் உள்ள எம்.கே.எஸ் காம்ப்ளக்ஸ்க்கு இரவு 11.45 மணி அளவில் உள்ளே நுழைந்து உள்ளனர். பின்னர், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து விட்டு சுமார் 1 மணி அளவில் வெளியே வரும் காட்சிகள் சிசிடிவி கோமிராவில் பதிவாகி உள்ளது.

  Also Read: கேரள நரபலி வழக்கு விசாரணை.. காவல்துறையின் தாமதத்தால் ஒரு உயிர் பறிபோனதா?

  உடனே இது குறித்து விசாரணை செய்ய கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமையில்  குற்றவாளியை தேடி வந்தனர்.  இந்நிலையில் குற்ற சம்பவம் நடந்த வணிக வளாகத்தில் சேகரிக்கப்பட்ட கைரேகை தரவுகளை கணினியில் வைத்து ஆராய்ந்த பொழுது சரித்திர பதிவேடு குற்றவாளிகளான மாதவரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (19), செங்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (39), தஞ்சாவூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25) இவர்களை அடையாளம் கண்டறிந்து கைது செய்தனர்.

  Also Read... படிக்கட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்.. கூடுதல் பேருந்து வசதி கேட்கும் கரூர் மக்கள்

  இவர்களிடமிருந்து 1 லேப்டாப், விலை உயர்ந்த கேமரா, 2 செல்போன், 3,11,500  ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகளை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Chennai, Crime News, Robbery