ஹோம் /நியூஸ் /சென்னை /

நீ யாரு.. என் கடையில இருந்து வர்ற.. ஷாக்கான உரிமையாளர்.. வடிவேலு ஸ்டைலில் பால் கடையில் கொள்ளை முயற்சி

நீ யாரு.. என் கடையில இருந்து வர்ற.. ஷாக்கான உரிமையாளர்.. வடிவேலு ஸ்டைலில் பால் கடையில் கொள்ளை முயற்சி

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

Chennai Crime News : மதுரவாயலில் நடிகர் வடிவேலு படத்தில் வரும் பிரபா ஒயின்ஸ் காமெடி காட்சி போல் கடை உரிமையாளர் வரும்போது  கடையில் இருந்து வெளியே வந்த திருடனால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை, மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி மசூதி தெரு பகுதியில் பால் கடை உள்ளது. அதிகாலையில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். அப்போது பால் கடை உரிமையாளர் கடையை திறக்க  அங்கே வந்தார். அப்போது கடையின் உள்ள இருந்து மர்ம நபர் சர்வசாதாரணமாக வெளியே வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் மர்ம நபரை பார்த்து “நீ யார்? இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர் “நான் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவன் தான்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார்.

மேலும் திருடன் தலைக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்திருந்ததும் கடையின் பூட்டை உடைக்க  இரும்பு ராடுடன் வந்ததும் அங்கிருந்த  சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக கடையின் மற்றொரு  உரிமையாளர் தாட்சாயணிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி அவர் மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும் கடையில் பணம் ஏதும் இல்லாததால் பணமோ, பொருட்களோ எதுவும் திருட போகவில்லை என்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், திருடன்  தலைகவசம், கையுறை அணிந்தும் கையில் இரும்பு ராடுடன் வந்து கடையை உடைக்க முயன்றதும், ஆட்கள் வருவதை கண்டதும் போன் பேசுவது போன்றும், உடற்பயிற்சி செய்வது போலும் பாசங்கு காட்டுவதும், பின்னர் கடைக்குள்ளே சென்று திருட முயற்சி செய்தபோது கடை உரிமையாளர் அங்கு வந்ததும் கடையில் உள்ளே இருந்து திருடன் வெளியே வருவது உள்ளிட்ட காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி  கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் நடிகர் வடிவேலு  நடித்த ஒரு படத்தில் வரும் “பிரபா ஒயின்ஸ் ஒனரா” என்ற காமெடி காட்சிபோல் கடை உரிமையாளர் வரும்போது கடையில் இருந்து வெளியே வந்த திருடனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் அப்பகுதி கடை வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

First published:

Tags: Chennai, Crime News, Local News