Home /News /chennai /

6 நாட்கள் வேலை.. ஒரு நாள் திருட்டு.. பூந்தமல்லியில் ‘சீரூடை’ கொள்ளையன் கைது

6 நாட்கள் வேலை.. ஒரு நாள் திருட்டு.. பூந்தமல்லியில் ‘சீரூடை’ கொள்ளையன் கைது

பூந்தமல்லியில் கொள்ளையன் கைது

பூந்தமல்லியில் கொள்ளையன் கைது

Poonamallee |போலீசார் தன்னை பிடிக்காமல் இருப்பதற்காக தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது போன்ற சீருடை அணிந்து கொண்டும் இரவு நேர பணிக்கு சென்று வருவதாக கூறி வலம் வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Poonamallee, India
    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் பூந்தமல்லியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த நபரை பிடித்து விசாரித்த போது  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.  பிடிபட்ட நபர் விழுப்புரம் அடுத்த செஞ்சியை சேர்ந்த சிவச்சந்திரன்(32), என்பதும் திருவேற்காடு பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்ற நிலையில் தனியாக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    மேலும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவர், வாரத்தில் ஆறு நாட்கள் விழுப்புரத்தில் தங்கி கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக சீருடை மட்டும் அணிந்து கொண்டு செல்வதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இரவு நேரத்தில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.

    மேலும் போலீசார் தன்னை பிடிக்காமல் இருப்பதற்காக தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது போன்ற சீருடை அணிந்து கொண்டும் இரவு நேர பணிக்கு சென்று வருவதாக கூறி வலம் வந்துள்ளார். சிவசந்திரனிடமிருந்து 10 பவுன் நகைகள் மற்றும் வீடுகளின் பூட்டை உடைக்க வைத்திருந்த ஸ்பேனர்,கட்டிங் பிளேடு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Also see... முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

    மேலும் விசாரணையில் இவர் கொள்ளையடித்த நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்து செலவு செய்தது விட்டதாக கூறினார். வாரத்தில் ஆறு நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CCTV, Crime News, Poonamallee Constituency, Theft, Theif

    அடுத்த செய்தி