Home /News /chennai /

தமிழகத்தில் தலித் ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற முடியாத அவல நிலை... கள ஆய்வில் வெளிவந்த தகவல்

தமிழகத்தில் தலித் ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற முடியாத அவல நிலை... கள ஆய்வில் வெளிவந்த தகவல்

தேசிய கொடி

தேசிய கொடி

National Flag : 75வது சுதந்திர தினமான, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தலித் ஊராட்சித் தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கி அதை உறுதி செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் செல்லக் கண்ணு தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை விமர்சையாக கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் இன்னும் பல மாவட்டங்களில்  தீண்டாமை காரணமாக தலித் ஊராட்சித் தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற முடியாத அவல நிலை நீடிப்பதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கள ஆய்வில் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளது.

இது மட்டுமல்லாமல் தீண்டாமையின் மேலும் பல்வேறு வடிவங்களை தலித் ஊராட்சித் தலைவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலித் தலைவர்களில், 24 மாவட்டங்களில் உள்ள 386 ஊராட்சிகளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு நடத்தியது.

இதில் அனைத்து ஊராட்சிகளிலும் ஏதாவது ஒரு வடிவில் தீண்டாமை இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தெரிவித்துள்ளார். குறிப்பாக 20 ஊராட்சிகளில் தாங்கள் தேசிய கொடியை ஏற்ற முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தலித்துகள் கொடியேற்றவில்லை என்பது அரசு அதிகாரிகளுக்கு தெரியும் என்றும் ஆனால் இந்த ஆண்டு இதுவரை அவர்கள் பாதுகாப்பாக கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் சாமுவேல்ராஜ் கூறினார்.

எனவே, இந்த தலைவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கி வருகிற 75 வது சதந்திர தினத்தில் அவர்கள் கொடியேற்ற முடியாவிட்டால் 15ம் தேதிக்கு பிறகு அதே கிராமத்தில் நாங்கள் அவர்களை கொடியேற்ற வைப்போம் எனவும் சாமுவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய களஆய்வில், 42 ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவர் பெயர் பலகை இல்லை, 22 ஊராட்சிகளில் நாற்காலியில் அமர முடியவில்லை, 33 ஊராட்சிகளில் அலுவலகத்தில் அமர முடியவில்லை , 14 ஊராட்சிகளில் அலுவலக சாவி தலைவருக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிய வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Must Read : சென்னை உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

இதேபோல, 39 ஊராட்சிகளிக் ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் தலைவரிடம் ஒப்படைக்கப்படவில்லை, 38 ஊராட்சிகளில் துணைத் தலைவர் கையெழுத்துபோட மறுக்கிறார், 34 ஊராட்சிகளில் தலைவர்கள் தாக்குதலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகின்றனர், 17 ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதும் தெரிவந்திருப்பதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்திடவும், அவர்கள் புகார் தெரிவிக்க நடைமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை வைப்பதாக அதன் தலைவர் செல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர்கள் எந்த சாதிய பாகுபாடின்று தேசியக்கொடியை ஏற்றிட உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயாலாளர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Dalit, Independence day, Panchayat

அடுத்த செய்தி