முகப்பு /செய்தி /சென்னை / சென்னை கோயம்பேடு செல்லும் வெளியூர் பேருந்துகள் இனி தாம்பரம் வழியாக செல்ல உத்தரவு..!

சென்னை கோயம்பேடு செல்லும் வெளியூர் பேருந்துகள் இனி தாம்பரம் வழியாக செல்ல உத்தரவு..!

சென்னை பேருந்து

சென்னை பேருந்து

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு, தாம்பரம் - கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் - மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு தாம்பரம், கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் - மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் ரூட்டை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,கிண்டி, அசோக்பில்லர், வடபழனி ஏரியாக்களில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

தாம்பரம் ரூட் என்றால் நேரடியாகவே அந்தந்த ஏரியாக்களில் இறங்கலாம். இந்த பிரச்னைக்கு தற்போது போக்குவரத்துத்துறை முடிவு கட்டியுள்ளது, இது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ள போக்குவரத்துத்துறை, சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊர்களில் இருந்து தாம்பரம் கடந்து சென்னை வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்த செட்க்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள். அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மாலை 5மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயில் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது

First published:

Tags: Chennai