ஹோம் /நியூஸ் /சென்னை /

“மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் சலுகை அல்ல.. கடமை..” - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

“மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் சலுகை அல்ல.. கடமை..” - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மாற்றுத்திறனாளிகள் எனும் பெயர் சூட்டினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

    சென்னை கோபாலபுரத்தில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 54 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    பின்னர் நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மாற்றுத்திறனாளிகள் எனும் பெயர் சூட்டி அவர்களுக்கென தனி துறையை உருவாக்கி செயலாற்றியதை நினைவுகூர்ந்தார்.

    ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. பனையூருக்கு படையெடுத்த ரசிகர்கள்..! 

    மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டங்கள் என்பது சலுகை அல்ல என்றும் அவை அனைத்தும் கடமை என்றும் கூறினார். மேலும், மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Marriage, MK Stalin