ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் தண்ணீர் லாரி ஓடாது.. பதற வைத்த சங்கம்! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு!

சென்னையில் தண்ணீர் லாரி ஓடாது.. பதற வைத்த சங்கம்! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு!

மாதிரி படம்

மாதிரி படம்

நாளை காலை முதல் சென்னையில் உள்ள 15 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என மாநில தலைவர் நிஜலிங்கம் போராட்டத்தை அறிவித்திருந்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாளை முதல் கலவரையற்ற போராட்டம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

  கடந்த 2ம் தேதி இரண்டு தண்ணீர் லாரிகளை பல்லாவரம் வட்டாட்சியர் சிறைபிடித்து தண்ணீர் எடுக்க உரிய ஆவணம் பெற வேண்டும் என கூறி லாரியை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். லாரியை சிறை பிடித்ததை கண்டித்தும் தண்ணீர் எடுக்க அரசிடமிருந்து அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நாளை காலை முதல் சென்னையில் உள்ள 15 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என மாநில தலைவர் நிஜலிங்கம் போராட்டத்தை அறிவித்தார்.

  இதையும் படிக்க : பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி மர்ம மரணம்.. ரூ.4 லட்சம் பேரம் பேசியதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

  தகவல் அறிந்த அதிகாரிகள் தண்ணீர் லாரி சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பரிந்துறையின் பேரில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் லாரி சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

  அப்பொழுது சிறை பிடித்த இரு லாரிகளை விடுவித்து பின்னர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்க ஆவனம் செய்வதாக கூறி போராட்டத்தை திரும்பபெற கேட்டுக்கொண்டதின் பேரில் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai, Lorry owners protest, Lorry owners strike, Water tank lorry Strike