ஹோம் /நியூஸ் /சென்னை /

தாய் பாலுக்கும் ஜி.எஸ்.டி வரி போடுவார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தாய் பாலுக்கும் ஜி.எஸ்.டி வரி போடுவார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

Congress Protest : அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உட்பட்ட 500க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம் ஆகியவற்றைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை ராஜிவ்காந்தி சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரசார் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாரும், காங்கிரசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட்ட 500க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றி சென்றனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது, நாட்டின் சுதந்திரத்தை அழிக்க நினைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஜி.எஸ்.டி வரியை அரிசி, பால், தயிர் போட்டு உள்ளனர். கழுதை பாலுக்கும் வரி போடுவார்கள். அதைவிட கொஞ்சம் ஏமாந்தால் தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி வரி போடுவார்கள்.

5 ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ரூ.5 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும், மோடி, அமிஷ்தாவை வீட்டுக்கு அனுப்பும்வரை நாம் ஒயக்கூடாது என்றும் அவர் பேசினார்.

கே.எஸ்.அழகிரி

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது, ஆட்சி அதிகாரத்தை விட்டு இறக்கினால் பிரதமர் மோடி முகவரி தெரியாமல் போய்விடுவார். 5 ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பாராளுமன்றத்தில் பேசுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசுவதற்கு அனுமதியே வழங்கவில்லை. 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் அனுபவம் இல்லாத அதானி பங்கேற்றுள்ளார். தவறு நடக்கவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார்.

5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் நீங்கள் நிர்ணயம் செய்த தொகையை விட குறைவாக வந்துள்ளது. அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். பாஜகவை தகர்க்க வலிமையான பரப்புரை வேண்டும். பெண்களை ஒன்றுதிரட்டவேண்டும். பெண்கள் தான் நாட்டின் வலிமையான சக்தி.

Also read... குடிபோதையில் காரை ஓட்டி மூன்று பேர் உயிரிழந்த வழக்கு: பெண் மருத்துவரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

சோனியா, ராகுல் மீதான தாக்குதல் ஜனநாயகம் மீதான தாக்குதல். அதனால் தான் நாங்கள் எதிர்க்கிறோம். புதிய கல்வி கொள்கையால் அடித்தட்டு மக்கள் மீண்டும் அவர்கள் குலத்தொழிலை செய்ய நேரிடும். பாஜக, ஆர்எஸ்எஸ் காரர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் அல்ல. தெற்காசியாவில் இருந்து வந்தவர்கள். நாங்கள் தான் இந்துக்கள் என்றும் அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, மாவட்டத் தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Congress, EVKS Elangovan, K.S.Alagiri