தங்கை முறை பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிய அண்ணனுடன் சென்று அந்த புகைப்படங்களை அழித்து விட்டு வருகிறேன் என தங்கை உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது-43) இவரது மனைவி பேபி (வயது-38) இவர்களுடைய மூத்த மகள் 21-வயதுடைய வெண்ணிலா வழக்கம் போல் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றனர்.
இந்தநிலையில் இன்று காலையில் நாகராஜ் எழுந்து பார்த்தபோது வெண்ணிலாவை காணவில்லை, அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் பின்னர் படுக்கை அறையில் சென்று பார்த்த போது கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
அதில் அஞ்சுகம் நகர் பகுதியில் இருக்கும் தனக்கு அண்ணன் உறவு முறை உடைய (23வயது) மதிக்கதக்க முருகன் என்பவர் தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாகவும், இருவரும் சேர்ந்து இருப்பது போலவும் சித்தரித்து வைத்து கொண்டு தொடந்து மிரட்டுவதாகவும். தன்னுடன் வாழ வில்லையென்றால் யாருடனும் வாழவிட மாட்டேன் என்றும், ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுபோன்று கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து அவருடன் வரவேண்டும் என தொந்தரவு செய்து வந்ததாகவும், அதனால் முருகன் கூட செல்ல விருப்பம் இல்லாமல் அவருடன் சென்று செல்போனில் உள்ள ஆபாச புகைப்படங்களை அழித்துவிட்டு திரும்பி வந்து விடுவேன் என உருக்கமாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து அந்த கடிதத்தை எடுத்து கொண்டு அவரின் பெற்றோர்கள் பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல் நிலையம் சென்று என் மகளை காணவில்லை என புகார் கொடுத்து கடிதத்தை காண்பித்து கண்ணீர் மல்க மகளை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Chennai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.