ஹோம் /நியூஸ் /சென்னை /

WATCH : ஊரா? குளமா? சென்னை மாங்காடு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்! 3வது நாளாக மக்கள் அவதி!

WATCH : ஊரா? குளமா? சென்னை மாங்காடு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்! 3வது நாளாக மக்கள் அவதி!

மாங்காடு பகுதியில் தேங்கியுள்ள மழை

மாங்காடு பகுதியில் தேங்கியுள்ள மழை

500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கிய நிலையில், வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை மாங்காடு பகுதியில் 500 க்கும் மேற்பட்ட வீடுகளை மூன்றாவது நாளாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும்நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மாங்காடு ஓம் சக்தி நகரில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கிய நிலையில், வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

  இதையும் படிக்க : என்னென்ன பாதிப்புக்கு எவ்வளவு நிவாரணம்.? விளக்கம் அளித்த அமைச்சர்!

  எனினும் மூன்றாவது நாளாக வெள்ள நீர் வடியாததால் மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகளில் தரை தளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளை காலி செய்து விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai rains, Rain water, Rainfall