ஹோம் /நியூஸ் /சென்னை /

பச்சிளம் குழந்தையை கட்டைப் பையில் வைத்து ரயிலில் விட்டு சென்ற பெண்..! - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

பச்சிளம் குழந்தையை கட்டைப் பையில் வைத்து ரயிலில் விட்டு சென்ற பெண்..! - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

ரயில் நிலையத்தில் குழந்தை

ரயில் நிலையத்தில் குழந்தை

மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் வந்து நின்றது.  அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது பெண்கள் மட்டும் பயணம் செய்யும் ரெயில் பெட்டியில் ஒரு கட்டைப்பை கேட்பாரற்று கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகை குரல் கேட்டது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த கட்டைப்பையை பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  உடனே அங்கு வந்த பச்சிளம் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. பெண்கள் பெட்டியில் பயணம் செய்தபோது யாரோ குழந்தையை கட்டைப்பையில் வைத்து சென்று இருப்பது தெரிந்தது. பெண் குழந்தை என்பதால் அவர் விட்டுச் சென்றாரா? அல்லது குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

  மேலும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தை இருந்த கட்டைப்பையுடன் வந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறனர். இதற்கிடையே மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது.

  Also see...கொள்ளிடம் நீரேற்று நிலையத்தை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு

  இது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்தனர். குழந்தை பிறந்து 10 நாட்களே இருக்கும் என்பதால் குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் மீட்கப்பட்ட பெண் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Baby, Mother, New born baby, Railway, Train