Home /News /chennai /

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்.. முதலுதவி செய்து காப்பாற்றிய டிஜிபி.. வைரல் வீடியோ

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்.. முதலுதவி செய்து காப்பாற்றிய டிஜிபி.. வைரல் வீடியோ

உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய டிஜிபி!

உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய டிஜிபி!

ரோந்து வாகனத்தை உடனடியாக வரவழைத்து சிறுவனை மீட்டு ஏற்கனவே தயாராக வரவழைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கடலலையில் சிக்கி மூர்ச்சையற்று கிடந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று மாலை 5.30 மணியளவில் மெரினா கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.

    அப்போது குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்த சிறுவன் கடலையில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென சிறுவன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தான். இதையடுத்து, கடற்கரையில் இருந்தோர் உடனடியாக சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    எனினும், சிறுவன் மூர்ச்சையற்று கிடந்துள்ளான்.  அந்த சமயத்தில், அவ்வழியாக நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த டிஜிபி சைலேந்திரபாபு இதனை பார்த்துள்ளார். இதன் பின்னர், சற்றும் தாமதிக்காமல் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளார்.



    மேலும், கடல் மணற்பரப்பில் செல்லும் ரோந்து வாகனத்தை உடனடியாக வரவழைத்து சிறுவனை மீட்டு ஏற்கனவே தயாராக வரவழைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் சிறுவன் தற்போது நலமாக உள்ளான். மேலும், மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Sylendra Babu

    அடுத்த செய்தி