Home /News /chennai /

ஒரு நாளுக்கு 2 லட்சம் பயணிகள்.. நாளுக்கு நாள் கவனம் பெறும் சென்னை மெட்ரோ..!

ஒரு நாளுக்கு 2 லட்சம் பயணிகள்.. நாளுக்கு நாள் கவனம் பெறும் சென்னை மெட்ரோ..!

மெட்ரோ ரயில்,

மெட்ரோ ரயில்,

2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 2 கோடியே 80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணித்த நிலையில் 2019 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை மூன்று கோடியே 28 லட்சமாக அதிகரித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதிலிருந்து, 7 ஆண்டுகளுக்கு பின் லாபகரமாக இயங்க தொடங்கியுள்ளது.

    சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  தொடக்கத்தில் குறுகிய தூரமே இயக்கப்பட்டதாலும், கட்டணம் அதிகமாக இருந்ததாலும் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது.  ஆனால் காலப்போக்கில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் பயணிகளின் கவனம் மெட்ரோ ரயில் பக்கம் திரும்பியது.

    முன்பை விட தற்போது அதிக தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாலும், கட்டணம் சற்று குறைக்கப்பட்டிருப்பதாலும் ஏராளமானோர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 2 கோடியே 80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணித்த நிலையில் 2019 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை மூன்று கோடியே 28 லட்சமாக அதிகரித்தது.

    கொரோனா தொற்று காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மீண்டும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால் இந்நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. நடப்பாண்டில் கடந்த எட்டு மாதத்தில் மட்டும், சுமார் மூன்றரை கோடி பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    ஜனவரி முதல் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள்தோறும் 2 லட்சம் பேர் மெட்ரோ சேவையை பயன்படுத்துகின்றனர். 22 மாநகரப் பேருந்துகள் மூலம் மெட்ரோ பயணிகளுக்கு சேவை வழங்கப்படுகிறது.இதேபோல மெட்ரோ ரயில் சேவை துவங்கியதில் இருந்து சராசரியாக வருடத்திற்கு 500 கோடி ரூபாய்க்கு மேலாக இழப்பு ஏற்பட்டு வந்துள்ள நிலையில் அந்த நிலை மாறியுள்ளது. செயல்பாட்டு அளவில் முதல் தடம் தற்போது லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பகால முதலீடு மற்றும் கடன்களை செலுத்த முடியவில்லை.

    மெட்ரோ பயணிகள் இதுவரை ...

    ஜூன் 2015 - டிசம்பர் 2018 வரை - 2,80,52,357

    2019 - 3,28,13,628

    2020 - 1,18,56,982

    2021 - 2,53,03,383

    2022 ஆகஸ்ட் வரை - 3,57,82,117

    2022 இறுதியில் 5 கோடியை எட்ட வாய்ப்பு

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Chennai metro, Metro Rail, Metro Train, Passengers

    அடுத்த செய்தி