ஹோம் /நியூஸ் /சென்னை /

மாணவர்கள் தொழில்நுட்ப மாற்றத்திற்கு தயாராக வேண்டும் - தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குநர் வலியுறுத்தல்!

மாணவர்கள் தொழில்நுட்ப மாற்றத்திற்கு தயாராக வேண்டும் - தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குநர் வலியுறுத்தல்!

பிரதியுஷா பொறியியல் கல்லூரி

பிரதியுஷா பொறியியல் கல்லூரி

மாணவர்கள் மாறிவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது தேசத்தின் அமைதி மற்றும் செழிப்புக்காக உழைக்க வேண்டும் என தேசிய தகவல் மையத்தின் மூத்த தொழில்நுட்ப இயக்குநர் கார்த்திகேயன் வலியுறுத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மாணவர்கள்  திறமையை வளர்த்துக்கொண்டு தொழில்நுட்ப மாற்றத்துக்குத் தயாராக வேண்டும் என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய தேசிய தகவல் மையத்தின் மூத்த தொழில்நுட்ப இயக்குநர் கார்த்திகேயன் வலியுறுத்தினார்.

  சென்னை வர்த்தக மையத்தில் பிரதியுஷா பொறியியல் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழாவில் 1244 பட்டதாரிகளுக்கு பட்டம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பட்டமளிப்பு விழாவை கல்லூரி தலைவர் ஸ்ரீ.பி.ராஜா ராவ் துவக்கி வைத்தார்.

  Twitter செயலிக்கு மாற்றாக Bluesky உருவாக்கும் ஜாக்!

  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை, தேசிய தகவல் மையத்தின் சீனியர் தொழில்நுட்ப இயக்குநர் கார்த்திகேயன் பேசுகையில், வாழ்க்கையின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு, தங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மாணவர்கள் சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் திறமையை வளர்த்துக்கொண்டு தொழில்நுட்ப மாற்றத்துக்குத் தயாராக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அர்ப்பணிப்புடன் மட்டுமே சரியான அணுகுமுறை, தயார்நிலை மற்றும் திறமை வளரும்.  இதன்மூலம் சமீபத்திய, தொடர்ந்து மற்றும் மாறிவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது தேசத்தின் அமைதி மற்றும் செழிப்புக்காக உழைக்க வேண்டும்.’ என்றார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: BE students, Chennai, Students