முகப்பு /செய்தி /சென்னை / தாம்பரத்தில் காதல் தோல்வியால் நர்சிங் மாணவி விபரீத முடிவு

தாம்பரத்தில் காதல் தோல்வியால் நர்சிங் மாணவி விபரீத முடிவு

சிட்லபாக்கம் காவல்நிலையம்

சிட்லபாக்கம் காவல்நிலையம்

Thambaram nursing student dead love failure | காதல் தோல்வியால் விரக்தியில் இருந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tambaram, India

தாம்பரம் அருகே காதல் தோல்வி காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் கோதாவரி தெருவில் வசித்துவரும் சாந்தி இவர் அதே பகுதியில் சூப்பு கடை நடத்தி வருகிறார். இவர் கணவரை பிரிந்து கடந்த 10 வருடங்களாக இரண்டு மகன் ஒரு மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்களும் தாம்பரம் பகுதியில் வேலை செய்து வருகிறார்கள். 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.

இந்தநிலையில் அந்த 16 வயது சிறுமி தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் மூன்று மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.அவரது காதலன் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்ததாக காதலர் தினத்தன்று அந்த சிறுமிக்கு தெரியவந்ததை அடுத்து காதலனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த சிறுமி கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெகு நேரமாக அவரது உறவினர்கள் கதவை தட்டிய நிலையில் சிறுமி கதவை திறக்காத நிலையில் சிறுமியின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் புடவையை கொண்டு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வி காரணமாக  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Tambaram