Home /News /chennai /

தென்காசி ஜாதிய பாகுபாடு: தெலங்கானா கவர்னர் தமிழிசை கருத்து!

தென்காசி ஜாதிய பாகுபாடு: தெலங்கானா கவர்னர் தமிழிசை கருத்து!

 தமிழிசை

தமிழிசை

“75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இது போன்ற பாகுபாடுகள் இருக்கக் கூடாது, இதுபோன்ற சம்பவங்களுக்கு உரிய கவனம் செலுத்தி நிகழாமல் தடுக்க வேண்டும்”

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தென்காசி அருகே பெட்டிக் கடையில் குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி பொருட்கள் கொடுக்க மறுத்த விவகாரம் குறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

    தேசப்பற்று ஊக்குவிக்கும் வகையில் சமஸ்கர் பாரதி என்கிற அமைப்பு நடத்திய நாட்டிய நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அதில் சிறப்புரையாற்றிய அவர், “இன்றைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரைப்படங்களை பற்றி தெரியும் அளவிற்கு இந்திய சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்த தலைவர்களை பற்றி தெரியவில்லை” என்று தெரிவித்தார்

    இன்றைய குழந்தைகளுக்கு தேசப்பற்றை சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரிவித்த அவர் தேசிய உணர்வு வந்தால் ஒழுக்க நெறி வளரும் என கூறினார். “குழந்தைகள் விவேகானந்தரையும் பாரதியாரையும் படித்தால் தற்கொலை எண்ணம் அவர்களுக்கு வராது” என கூறினார்

    இதனையடுத்து தென்காசி அருகே நடைபெற்ற பெட்டிக் கடையில் குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி பொருட்கள் கொடுக்க மறுத்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, “75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இது போன்ற பாகுபாடுகள் இருக்கக் கூடாது, இதுபோன்ற சம்பவங்களுக்கு உரிய கவனம் செலுத்தி இதுபோன்று நிகழாமல் தடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் வாசிக்க: "பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்" - முக ஸ்டாலின் கடிதம்

    மேலும் மியான்மர் நாட்டில் காரைக்கால் பகுதியை சேர்ந்த மக்கள், கொத்தடிமைகளாக சிக்கி உள்ளனர் என தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

     
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Caste, Tamilisai Soundararajan, Tenkasi

    அடுத்த செய்தி