ஹோம் /நியூஸ் /சென்னை /

6 நாள் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது : உண்ணாவிரத்தை வாபஸ் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்!

6 நாள் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது : உண்ணாவிரத்தை வாபஸ் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்..

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்..

முன்னதாக தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

6 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றுள்ளனர்.

சமவேளைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26 ந்தேதி முதல் பேராசியர் அன்பழகன் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

31/5/2009ம் ஆண்டுக்கு முன்னர் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதியத்தை, 1 .6 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். முன்னதாக தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இன்று தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அறிய நிதித்துறை செயலாளர் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரை அடங்கிய குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனை அடுத்து தற்போது போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

First published:

Tags: DPI, Govt teachers, Teachers Protest, TN Govt