Home /News /chennai /

ஆசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை..! கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடிய மாணவர்கள்

ஆசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை..! கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடிய மாணவர்கள்

பள்ளி ஆசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி மறியாதை செலுத்திய மாணவர்கள்

பள்ளி ஆசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி மறியாதை செலுத்திய மாணவர்கள்

Chennai | டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றோம். ஆசிரியர் தினமான இன்று பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி சென்னை வித்யா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை சோழிங்கநல்லூர் பிரதான சாலை ஜல்லடியன்பேட்டையில் வித்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிப்புரியும் ஆசிரியைகள், ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 95 பேருக்கு பள்ளி மாணவ மாணவிகள் தங்களது சொந்த செலவில் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.

    மாணவர்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தியதை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.  பின்னர் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் 95 ஆசிரியர்களின் கையெழுத்துக்களுடன் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி ஆசிரியர்களுக்கு மாணவர்களும், மாணவர்களுக்கு ஆசிரியர்களும் மாறி மாறி  ஊட்டி கொண்டாடினர்.

    பொதுவாக கோயில் திருவிழாக்களில் முக்கிய அந்தஸ்து உள்ளவர்களுக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்து மறியாதை செலுத்துவதை பலரும் பார்த்திருப்போம்.



    Also see... ஓசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது இந்துக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..

    ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி மறியாதை செலுத்தி மாணவர்களின் அன்பையும் மறியாதையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: வினோத், ஈசிஆர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, School students, Teacher's Day

    அடுத்த செய்தி