Home /News /chennai /

சுதந்திர தினத்துக்கு டாஸ்மாக் லீவ்.. தடையை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை

சுதந்திர தினத்துக்கு டாஸ்மாக் லீவ்.. தடையை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை

டாஸ்மாக்

டாஸ்மாக்

ஆகஸ்ட் 15ம் தேதியன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி டாஸ்மாக், கிளப், பார் உட்பட அனைத்து இடங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

    நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுபோக, மாநிலத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பவும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அதன்படி, சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக  சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம் - கானா பாடகர் உட்பட இருவர் போக்சோவில் கைது

    அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். மதுபான விற்பனை நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai, Tasmac

    அடுத்த செய்தி