ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளி டாஸ்மாக் கலெக்‌ஷன்... தமிழகம் முழுவதும் ரூ.205 கோடிக்கு மது விற்பனை.!

தீபாவளி டாஸ்மாக் கலெக்‌ஷன்... தமிழகம் முழுவதும் ரூ.205 கோடிக்கு மது விற்பனை.!

மாதிரி படம்

மாதிரி படம்

tasmac collection | தமிழகம் முழுவதும் நேற்று 205 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது அதிகமாக விற்பனையாகி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 205 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

  தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது.

  தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. கடந்தாண்டு நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை நாளன்று சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும்.

  இதையும் படிங்க : தொடங்கியது தீப திருநாள் கொண்டாட்டம்.. சூப்பரான 10 தீபாவளி பாடல்கள் லிஸ்ட்!

  இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று 205 கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் கடைகளில் மது அதிகமாக விற்பனையாகி உள்ளது. மேலும் இன்று 230 முதல் 240 கோடி ரூபாய் வரை மது விற்பனையும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நாளை சுமார் 250 கோடிக்கு மேல் மது பாட்டில் விற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.

  டாஸ்மாக் கலெக்ஷன் விவரம்(கோடியில்) :

  சென்னை - 38.64

  திருச்சி -41.36

  சேலம் -40.82

  மதுரை - 45.26

  கோவை -39.34

  மொத்தம் - 205 .42

  இதையும் படிங்க : தீபாவளி டாஸ்மாக் விற்பனை.. போலி மதுபானங்களை கண்டறிவது எப்படி? | வீடியோ

  சென்னையில் விற்பனை சரிவு :

  சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் பெரும்பாலும் தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாட சென்றதால் சென்னையில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்திருந்தது. மேலும், டாஸ்மாக்கில் இன்று  230 கோடியில் இருந்து 240 கோடி வரை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Tamilnadu, Tasmac