ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் பவர்கட்.. இன்றும் நாளையும் மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா?

சென்னையில் பவர்கட்.. இன்றும் நாளையும் மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மின் தடை தொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் 19.01.2023 (வியாழக்கிழமை) அன்றும் 20.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்றும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (19.01.2023)யில்

எழும்பூர் பகுதி : கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, ஜகதம்மாள் கோயில் தெரு பாந்தியன் ரோடு மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் சந்து, நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்,

அம்பத்தூர் பகுதி : டி.ஐ சைக்கிள் சோழபுரம், வி.ஜி.என். கே.கே ரோடு, அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், திருவேங்கட நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்,

பெரம்பூர் பகுதி : சிட்கோ வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகர், நேரு நகர், டி.எச் ரோடு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, டீச்சர்ஸ் காலனி மெயின் ரோடு, சோலையம்மன் கோயில் குடியிருப்பு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இதேபோல நாளை (20.01.2023) மின்தடை

அடையார் பகுதி : வேளச்சேரி பைபாஸ் ரோடு முழுவதும், ராம் நகர், சசி நகர், ராஜலட்சுமி நகர், வி.ஜி.பி செல்வா நகர் தரமணி லிங்க் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்,

அம்பத்தூர் பகுதி : அடையாளம்பட்டு ஐஸ்வர்யா நகர், பாரதியார் தெரு, பெருமாள் கோவில் தெரு நொளம்பூர் கீழ் அயனம்பாக்கம், இந்திரா காந்தி ரோடு, நேரு தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Chennai power cut, Powercut, TANGEDCO