ஹோம் /நியூஸ் /சென்னை /

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் 380.76 % உயர்வு!

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் 380.76 % உயர்வு!

தமிழக வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

தமிழக வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

TamilNadu Revenue | நிதி பற்றாக்குறை 2019-2020ம் ஆண்டை காட்டிலும் 2020-21ம் நிதி ஆண்டில் 56.17% அதிகரித்து நிதி பற்றாக்குறை 93,983 கோடியாக உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் 380.76 % உயர்ந்துள்ளது என  தமிழ்நாடு முதன்மை தணிக்கை அதிகாரி அம்பலவாணன் தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில் இன்று  சமர்ப்பிக்கப்பட்ட இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கை குறித்து தமிழ்நாடு முதன்மை தணிக்கை அதிகாரி அம்பலவாணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் 380.76 % உயர்ந்துள்ளது. 2016-2017ம் ஆண்டுகளில் 12,964 கோடியாக இருந்த பற்றாக்குறை அளவு, 2020-2021ம் ஆண்டில் 62,326 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

  தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 3% அளவிற்குள் கட்டுப்படுத்த தவறியுள்ளது. நிதி பற்றாக்குறை 2019-2020ம் ஆண்டை காட்டிலும் 2020-21ம் நிதி ஆண்டில் 56.17% அதிகரித்து நிதி பற்றாக்குறை 93,983 கோடியாக உள்ளது.

  இதையும் படிங்க : சென்னையில் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை..

  2019-2020ம் ஆண்டை விட 2020-2021ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் 0.26% குறைந்துள்ளது. சம்பளம், ஓய்வூதியம், மானியம் ஆகிய செலவினங்கள் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வருகிறது. இதனால் பிற சமூகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு குறைந்த அளவே செலவிட முடிகிறது.

  அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. திருமண உதவி, மகப்பேறு உதவி, இலவச மடிக்கணினி, சீருடை போன்ற திட்டங்களுக்கு செலவிடப்படும் மானிய தொகை அதிகரித்துள்ளது. தமிழக அரசு கடனுக்காக செலுத்தும் வட்டி அதிகரித்துள்ளது. 18.32% ஆக இருந்த வட்டி செலுத்தும் தொகை தற்போது 20.97% ஆக உயர்ந்துள்ளது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Tamilnadu government