ஹோம் /நியூஸ் /சென்னை /

தமிழக காவல்துறையா...? அறிவாலயத்தை காக்கும் துறையா..? அண்ணாமலை கேள்வி

தமிழக காவல்துறையா...? அறிவாலயத்தை காக்கும் துறையா..? அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை, சைலேந்திரபாபு

அண்ணாமலை, சைலேந்திரபாபு

BJP Annamalai | ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி ஆதாரங்களுடன் உங்களை கேட்கும் கேள்விகள் உங்களை அச்சத்தில் ஆழ்த்தி அறிவாலயத்திடம் அறிக்கை பெறும் அளவிற்கு தள்ளியுள்ளதே என்பதில் வருத்தமே.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழக காவல்துறை அறிவாலயத்தை காக்கும் துறையாக செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  தமிழ்நாடு காவல்துறை சார்பில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துகளை கூறி புலன் விசாரணையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும், வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு என்றும்  எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, மத்திய அரசுக்கு முறையாக அறிக்கை அனுப்பி, அதன்பிறகு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டதாக அண்ணாமலை மீது தமிழக காவல்துறை குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

  இதையும் படிங்க : ஆலய பிரவேசத்தை அமைதியாக நடத்தியவர் முத்துராமலிங்க தேவர் - எச்.ராஜா புகழாரம்!

  மேலும் உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தது.

  இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ட்விட்டரில் இதுகுறித்து விளக்கமாக பதிலளிப்பேன் என  பதிவிட்டிருந்தார்.

  இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக  நான் பல கருத்துகளை கூறி விசாரணையின் போக்கை திசைதிருப்ப முயற்சிப்பதாக காவல்துறை தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணர்கிறோம்.

  இதை கூடாது என்பதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இன்றுடன் இந்த சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை தமிழக முதல்வர் மவுனம் காப்பது ஏன்? இந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத அமைச்சர் இதைப்பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறார்.

  இதையும் படிங்க : ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்... திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பரபரப்பு அறிக்கை!

  6 தனிப்படை அமைத்து விசாரித்து கொண்டிருக்கிறோம் என சொல்லும் காவல்துறை அடுத்த கட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்? அக்டோபர் 21ம் தேதி ஜமேஷா முபின் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா?

  ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி ஆதாரங்களுடன் உங்களை கேட்கும் கேள்விகள் உங்களை அச்சத்தில் ஆழ்த்தி அறிவாலயத்திடம் அறிக்கை பெறும் அளவிற்கு தள்ளியுள்ளதே என்பதில் வருத்தமே.

  தமிழக ஆளுநர் இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர் என்பது போன்று சமூக வலைதளங்களில் பரப்பி வரும் திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வழக்கின் போக்கை ஆளும் கட்சியினர் திசைதிருபு்பும் முயற்சியாக மேற்கொள்ளப்படும் பொய் பரப்புரைகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Annamalai, BJP, Chennai